உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / சோலார் மின்கம்பம் நடும் பணியில் தொழிலாளர்கள்

சோலார் மின்கம்பம் நடும் பணியில் தொழிலாளர்கள்

கிருஷ்ணராயபுரம்:கிருஷ்ணராயபுரம், தேசிய நெடுஞ்சாலை பகுதிகளில் புதிதாக சோலார் விளக்கு அமைக்கும் பணி நடந்தது.கரூர்-திருச்சி தேசிய நெடுஞ்சாலை கிருஷ்ணராயபுரம் பகுதிகளில், புதிதாக சோலார் மின் விளக்குகள் அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. கடந்த சில நாட்களாக கிருஷ்ணராயபுரம் கடை வீதி, யூனியன் அலுவலகம், மாரியம்மன் கோவில் சாலை, தாலுகா அலுவலக சாலை ஆகிய பகுதிகளில் சோலார் மின் விளக்குகள் புதிதாக அமைக்கும் வகையில் சிமென்ட் கான்கிரீட் அமைக்கப்பட்டது. தற்போது சோலார் விளக்கு மின் கம்பங்கள் நடும் பணி நடந்து வருகிறது. பொக்லைன் இயந்திரம் கொண்டு பொருத்தப்பட்டது. பணிகளை மணவாசி டோல்கேட் நிர்வாகத்தினர் பார்வையிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ