உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மாரியம்மன் கோவிலில் வழிபாடு

மாரியம்மன் கோவிலில் வழிபாடு

கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் அடுத்த, பிள்ளபாளையம் பஞ்சாயத்தில், வல்லம் மாரியம்மன் கோவில் உள்ளது. ஆனி மாத கோவில் குளிர்ச்சி திருவிழாவை முன்னிட்டு, நேற்று காலை லாலாப்பேட்டை காவிரி ஆற்றில் இருந்து, புனிதநீர் எடுத்து பிள்ளபாளையம், வல்லம் வழியாக கோவிலுக்கு பக்தர்கள் வந்து வழிபட்டனர். இரவு 8:00 மணிக்கு மாரியம்மனுக்கு அபிேஷகம் செய்யப்பட்டு, மலர் மாலைகள் கொண்டு அலங்காரம் செய்து சிறப்பு வழிபாடு பூஜை செய்யப்பட்டது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி