உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கிருஷ்ணராயபுரம் பகுதியில் மஞ்சள் பை விழிப்புணர்வு

கிருஷ்ணராயபுரம் பகுதியில் மஞ்சள் பை விழிப்புணர்வு

கிருஷ்ணராயபுரம், கிருஷ்ணராயபுரம் டவுன் பஞ்சாயத்து பகுதியில், மஞ்சள் பை பயன்பாடு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.கிருஷ்ணராயபுரம் டவுன் பஞ்சாயத்து செயல் அலுவலர் கிருஷ்ணன் தலைமை வகித்தார். இப்பகுதியில் வசிப்போர், பாலித்தீன் பைகள் பயன்பாட்டை தவிர்த்து, அதற்கு பதிலாக பொருட்கள் வாங்குவதற்கு மஞ்சள் நிற பைகளை, பயன்படுத்துவதற்கான விழிப்புணர்வு பணி கிருஷ்ணராயபுரம் பஸ் ஸ்டாப் கடைவீதியில் நடந்தது.டவுன் பஞ்சாயத்து சுகாதார மேற்பார்வையாளர் சண்முகம் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ