உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / முஸ்லிம் மகளிர் சங்க நிர்வாகிகளுக்கு விண்ணப்பிக்கலாம்

முஸ்லிம் மகளிர் சங்க நிர்வாகிகளுக்கு விண்ணப்பிக்கலாம்

கரூர் முஸ்லிம் மகளிர் உதவும் சங்கத்தில், கவுரவ செயலாளர் உள்பட பல்வேறு பதவிகளுக்கு வரும், 15க்குள் விண்ணப்பிக்கலாம் என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.அவர், வெளியிட்ட அறிக்கை:கரூர் மாவட்டத்தில், சிறுபான்மையின சமுதாயத்தை சார்ந்த பின் தங்கிய நிலையிலுள்ள, முஸ்லிம் மகளிர்களுக்கு உதவும் வகையில், மகளிர் உதவும் சங்கம் சார்பில் மானியத்துடன் கடன் உதவி வழங்கப்பட்டு வருகிறது. தற்போது, கூடுதலாக ஒரு முஸ்லிம் மகளிர் உதவும் சங்கம் துவங்கப்பட உள்ளது. இதில், கவுரவ செயலாளர், கவுரவ இணை செயலாளர், மூன்று உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டு நியமிக்கப்பட உள்ளனர்.இதற்கு, தங்களது முழு விபரங்கள் அடங்கிய புகைப்படத்துடன் கூடிய விண்ணப்பத்தை, மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் வரும், 15க்குள் சமர்ப்பிக்க வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை