உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / இளம் வாழ்வியல் விஞ்ஞானிகள் கண்காட்சி

இளம் வாழ்வியல் விஞ்ஞானிகள் கண்காட்சி

குளித்தலை: குளித்தலை அண்ணா சமுதாய மண்டபத்தில், இளம் வாழ்வியல் விஞ்ஞானிகள் என்ற தலைப்பில் இரண்டு நாள் கண்காட்சி நடந்தது. குளித்தலை, காவேரி நகர் அண்ணா சமுதாய மண்டபத்தில் தண்ணீர்பள்ளி நேச்சர் டிரஸ்ட் அறக்கட்டளை சார்பில், இரண்டு நாட்கள் இளம் வாழ்வியல் விஞ்ஞானிகள் என்ற தலைப்பில் அறிவியல் கண்காட்சி நடந்தது. கண்காட்சியில் பத்துக்கும் மேற்பட்ட அரசு, தனியார் பள்ளிகளில் இருந்து, 150க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். கண்காட்சியில் உடல் இயக்கங்களை பற்றியும், இயற்கை வாழ்வியல் உணவு முறைகள் பற்றியும், காய்கறிகள் பற்றியும் மாணவ, மாணவியர் கண்காட்சியில் தங்கள் செய்முறைகளை செய்து காட்டினார். கண்காட்சியை பொதுமக்கள் கண்டுகளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை