உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / விஷ சாராய வழக்கை சி.பி.ஐ., துரிதப்படுத்த இளைஞர் காங்., தலைவர் வலியுறுத்தல்

விஷ சாராய வழக்கை சி.பி.ஐ., துரிதப்படுத்த இளைஞர் காங்., தலைவர் வலியுறுத்தல்

விஷ சாராய வழக்கை சி.பி.ஐ., துரிதப்படுத்தஇளைஞர் காங்., தலைவர் வலியுறுத்தல்கரூர், நவ. 22-''கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கு சி.பி.ஐ.,க்கு மாற்றப்பட்டுள்ளது. அதனை துரிதப்படுத்தி உண்மையான குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும்,'' என, இளைஞர் காங்., தலைவர் லெனின் பிரசாத் தெரிவித்தார்.கரூரில், இளைஞர் காங்., ஆலோசனை கூட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் கீர்த்தன் தலைமை வகித்தார். இதில் பங்கேற்ற, மாநில இளைஞர் அணி தலைவர் லெனின் பிரசாத் நிருபர்களிடம் கூறியதாவது: அதானி, தங்கள் நாட்டு முதலீட்டாளர்களை ஏமாற்றியதாகவும், அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாகவும் அமெரிக்கா குற்றச்சாட்டு வைத்துள்ளது. இது இந்தியாவிற்கு அவமானம். இதற்கு பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும். தமிழகத்தில், கொலை சம்பவங்களில் உடனடியாக போலீஸ் நடவடிக்கை எடுத்து வருகிறது. கள்ளக்குறிச்சி விஷச்சாராய வழக்கில் நியாயம் கிடைக்க வேண்டும். இந்த வழக்கு சி.பி.ஐ.,க்கு மாற்றப்பட்டுள்ளது, அதை துரிதப்படுத்தி உண்மையான குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும். தமிழகத்தில் ஆட்சியில் பங்கு என்பதை, காங்., மத்திய தலைமைதான் முடிவு எடுக்க வேண்டும். இவ்வாறு கூறினார். கூட்டத்தில் கரூர் மாநகராட்சி கவுன்சிலர் ஸ்டீபன்பாபு, மத்திய நகர தலைவர் வெங்கடேஷ் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி