மேலும் செய்திகள்
சுவற்றில் பைக் மோதி தொழிலாளி உயிரிழப்பு
09-Jul-2025
குளித்தலை :மது போதையில் வாய்க்காலில் விழுந்த வாலிபர் இறந்தார். குளித்தலை அடுத்த, புத்துார் பஞ்., வேங்கடத்தான்பட்டியை சேர்ந்தவர் மாரிமுத்து, 29, சலுான் கடை வைத்துள்ளார். இவர் நேற்று முன்தினம் மதியம், 3:30 மணியளவில் மது போதையில் நச்சலுார் - நெய்தலுார் ரோட்டில் உள்ள, கட்டளை மேட்டு வாய்க்கால் சிமென்ட் கான்கிரீட் கட்டையில் படுத்திருந்தார். அப்போது நிலைதடுமாறி, வாய்க்காலில் விழுந்தவர் நீரில் மூழ்கினார். அருகில் இருந்த சேப்பலாபட்டியை சேர்ந்த பிரவீன்குமார், சந்தோஷ் மற்றும் கட்டாணி மேடு விஜயன் ஆகியோர், தண்ணீரில் மூழ்கிய மாரிமுத்துவை இறந்த நிலையில் மீட்டனர். இது குறித்து அவரது அண்ணன் சக்திவேல் கொடுத்த புகார்படி, நங்கவரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
09-Jul-2025