உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / பைக்கில் இருந்து கீழே விழுந்த வாலிபர் பலி

பைக்கில் இருந்து கீழே விழுந்த வாலிபர் பலி

கரூர், வேலாயுதம்பாளையம் அருகே, பைக்கில் இருந்து தவறி விழுந்த வாலிபர் உயிரிழந்தார்.கரூர் மாவட்டம், கிழக்கு தவிட்டுப்பாளையம் வீரராஜபுரம் பகுதியை சேர்ந்த தங்கவேல் என்பவரது மகன் கார்த்திகேயன், 21; தனியார் மொபைல் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவர், நேற்று முன்தினம் வேலாயுதம்பாளையம் அருகே, புகழூர் வாய்க்கால் பாலம் பகுதியில், பைக்கில் சென்று கொண்டிருந்தார்.அப்போது, பைக் திடீரென நிலை தடுமாறியதில் கார்த்திகேயன் கீழே விழுந்தார். அதில் தலையில் படுகாயம் அடைந்த கார்த்திகேயன், கரூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். வேலாயுதம்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை