உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / வேலாயுதம்பாளையம் அருகே வாலிபர் கொலை: இருவர் கைது

வேலாயுதம்பாளையம் அருகே வாலிபர் கொலை: இருவர் கைது

கரூர், நவ. 2-வேலாயுதம்பாளையம் அருகே, வாலிபரை கத்தியால் குத்தி கொன்றதாக, இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர். கரூர் மாவட்டம், வாங்கல் குப்புச்சிபாளையம் பகுதியை சேர்ந்த ஜெயபால் என்பவரது மகன் கதிரவன், 24; இவர் கடந்த, 31 இரவு மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள, பகவதி அம்மன் கோவில் வளாகத்தில், தனது தாய் கோயந்தி, 42, யுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது, குடிபோதையில் டூவீலரில் சென்ற, நாமக்கல் மோகனுார் பகுதியை சேர்ந்த கிேஷாக், 19; வேலாயுதம்பாளையம் பகுதியை சேர்ந்த விஸ்வரன், 24, ஆகியோர், கதிரவனையும், அவரது தாயையும் தகாத வார்த்தையால் திட்டி விட்டு சென்றனர்.இதனால், கதிரவன் மற்றொரு டூவீலரில் நண்பர்களுடன் சென்று, வேலாயுதம்பாளையம் சர்வீஸ் சாலையில், நின்று கொண்டிருந்த கிேஷாக், விஸ்வரன் ஆகியோரிடம், தகாத வார்த்தையில் திட்டியது குறித்து கேள்வி எழுப்பினார். அப்போது, ஆத்திரமடைந்த விஸ்வரன், கதிரவனை பிடித்து கொண்டார். கிேஷாக் கத்தியால், கதிரவனின் நெஞ்சில் குத்தி விட்டு தப்பி ஓடினார். அருகில் இருந்தவர்கள், கதிரவனை மீட்டு கரூர் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், செல்லும் வழியில் கதிரவன் உயிரிழந்தார்.தகவல் அறிந்த வேலாயுதம்பாளையம் போலீசார், கதிரவன் உடலை கைப்பற்றி, கரூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின், தப்பி ஓடிய கிேஷாக், விஸ்வரனை வேலாயுதம்பாளையம் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை