உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / தி.மு.க., பொறுப்பாளர் சரக்கு ஓட்டுவதாக ஆடியோ வைரல்முன்னாள் நகர செயலாளரின் செட்டப் என விளக்கம்

தி.மு.க., பொறுப்பாளர் சரக்கு ஓட்டுவதாக ஆடியோ வைரல்முன்னாள் நகர செயலாளரின் செட்டப் என விளக்கம்

தி.மு.க., பொறுப்பாளர் 'சரக்கு' ஓட்டுவதாக ஆடியோ வைரல்முன்னாள் நகர செயலாளரின் 'செட்டப்' என விளக்கம்கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி, தி.மு.க., நகர பொறுப்பாளர் அஸ்லம், 'சரக்கு' ஓட்டுவதாக, அவரது உதவியாளர் பேசியதாக ஆடியோ வெளியானது. முன்னாள் தி.மு.க., நகர செயலாளர் நவாப் தரப்பினர் ஆடியோவை செட்டப் செய்து வெளியிட்டதாக, அஸ்லம் தரப்பு விளக்கம் அளித்துள்ளது.கிருஷ்ணகிரி, தி.மு.க., நகர செயலாளராக இருந்தவர் நவாப். இவர், கட்சி கட்டுப்பாட்டை மீறி, கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டதாக, கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கியதாக, தி.மு.க., பொதுச்செயலர் துரைமுருகன் அறிவித்தார்.இதையடுத்து கடந்த பிப்., 8ல், கிருஷ்ணகிரி நகரத்தை கிழக்கு, மேற்கு என, 2ஆக பிரித்து தி.மு.க., பொறுப்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். அதன்படி கிருஷ்ணகிரி கிழக்கிற்கு வேலுமணி, மேற்கிற்கு அஸ்லம் என பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர். அஸ்லம், தி.மு.க., கிழக்கு மாவட்ட செயலாளர் மதியழகன் எம்.எல்.ஏ.,வின் தீவிர ஆதரவாளர். இவர் நடத்தி வரும் ஓட்டலுக்கு கடந்த, 18 இரவு கிருஷ்ணகிரி டி.எஸ்.பி., முரளி தலைமையிலான போலீசார் வந்து விசாரித்து சென்றனர். இந்நிலையில் அஸ்லமின் உதவியாளர் பேசியதாக ஆடியோ ஒன்று நேற்று வைரலானது. அதில் அஸ்லம் உதவியாளர் என பேசுபவர், 'அஸ்லம், சரக்கு ஓட்றாருல, கொஞ்சம் நோட்டு மேட்டரும் வந்திருக்கு. நம்மை பிடிக்காத யாரோ டி.ஐ.ஜி., - எஸ்.பி.,யிடம் போட்டு கொடுத்துள்ளனர். ஆனால், அனைவரும் அண்ணனுக்கு (அஸ்லம்) தெரிந்தவங்க தானே. பெயரளவிற்கு வந்து சென்று விட்டனர். தொழில் நல்லா நடக்குது. அனைவருக்கும் மாதந்தோறும் கட்டிங் கொடுக்கிறோம். மாவட்ட செயலாளர் மதியழகன் எம்.எல்.ஏ., அண்ணன் இருக்கும் வரை, யாரும் எதுவும் செய்ய முடியாது. நானும் சில நாட்கள் மொபைலை. சுவிட்ச் ஆப் செய்ய போகிறேன். சிறிது நாட்கள் எதுவும் செய்யக்கூடாது என அஸ்லம் கூறியுள்ளார்' என அதில் பேசியுள்ளார்.இது குறித்து கிருஷ்ணகிரி, தி.மு.க., மேற்கு நகர பொறுப்பாளர் அஸ்லம் கூறியதாவது: கடந்த இரு நாட்களுக்கு முன், போலீசாருக்கு, என் ஓட்டல் அருகே தகராறு நடப்பதாகவும், கத்தியோடு சிலர் ஓடுகின்றனர் என, 100க்கு புகார் அளித்துள்ளனர். இதையடுத்து போலீசார் ஓட்டலுக்கு வந்து விசாரித்தனர். அதில், அதுபோல சம்பவம் நிகழவில்லை என்பதால், திரும்பி சென்று விட்டனர்.ஆனால், மறுநாள், 'வாட்ஸாப்'பில் என் உதவியாளர் என, யாரோ ஒருவர் பேசும் ஆடியோ வெளியானது. அவர்கள் பேசும்போது அவர்கள் பெயரை கூட கூறவில்லை. அந்த ஆடியோவை கேட்டாலே, அது செட்டப் ஆடியோ என புரியும். என் மீதுள்ள காழ்ப்புணர்ச்சியில் முன்னாள், தி.மு.க., நகர செயலாளர் நவாப் தரப்பினர், அதை, 'வாட்ஸாப்'பில் பரப்புகின்றனர். இச்சம்பவம் குறித்து கட்சிக்கு விளக்கம் அளித்துள்ளேன்.இவ்வாறு கூறினார்.இது குறித்து கிருஷ்ணகிரி, தி.மு.க., முன்னாள் நகர செயலாளர் நவாப் கூறுகையில், ''நான், என் சொந்த வேலையாக கடந்த, ஒரு வாரமாக சென்னையில் தங்கி உள்ளேன். அங்கு என்ன நடந்தது என்பது குறித்து எனக்கு தெரியாது. அஸ்லம், என் மீது கூறிய குற்றசாட்டுகள் உண்மையல்ல,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி