மேலும் செய்திகள்
துாய்மை பணியாளர்களுக்குபொங்கல் பரிசு வழங்கல்
10-Jan-2025
சொத்துக்காக மூதாட்டியை கொன்றது அம்பலம் அ.தி.மு.க., நிர்வாகி உட்பட 5 பேர் கைதுகிருஷ்ணகிரி : ஊத்தங்கரை அருகே, சொத்திற்காக மூதாட்டியை கொலை செய்து விட்டு, இயற்கை மரணம் அடைந்ததாக நாடகமாடிய அவரது உறவினர்கள், 5 பேரை போலீசார் கைது செய்தனர்.கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை, அண்ணாநகரை சேர்ந்தவர் மாலிகாபீ, 60. திருமணமாகாத அவருக்கு, பானு, ஜெரினா என்ற, 2 சகோதரிகள். ஜெரினாவின் மகன் ரபீக், 30. மாலிகாபீயின் தந்தை வழி சொத்தில் சகோதரிகளுக்குள் பிரச்னை இருந்துள்ளது. இது குறித்து நீதிமன்றத்தில் வழக்கு நடந்த நிலையில், மாலிகாபீக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது. கடந்த, 2024 ஜன., 27ல் மாலிகாபீ வீட்டில் இறந்து கிடந்தார். அவர் இயற்கையான முறையில் இறந்ததாக அருகிலிருந்தவர்கள் கூறினர். அப்போது, மாலிகாபீ அடித்து கொலை செய்யப்பட்டதாக, ஊத்தங்கரை போலீசுக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி, அவரது சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு, கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இதில், அவர் கொலையானது நேற்று முன்தினம் தெரியவந்தது.இதைதொடர்ந்து போலீசார் விசாரணையில், ஜெரினாவின் மகன் ரபீக், பானு குடும்பத்தினுருடன் சேர்ந்து, மாலிகாபீயை கோணிப்பையால் முகத்தை அழுத்தியும், காலால் மிதித்து கொன்றதும் தெரியவந்தது. இதையடுத்து ரபீக், அவருக்கு உடந்தையாக இருந்த அவரது பெரியம்மா பானு, 55, அவரது கணவரும், அ.தி.மு.க., மாவட்ட சிறுபான்மை பிரிவு துணை தலைவருமான அப்துல் சமத், 6-0, இவர்களது மகன்கள் அக்பர், 35, அசேன், 30 உள்பட, 5 பேரை, ஊத்தங்கரை போலீசார் நேற்று கைது செய்தனர்.
10-Jan-2025