நிலத்தகராறில் ராணுவ வீரரை தாக்கிய தம்பி உள்பட 6 பேர் மீது வழக்கு
நிலத்தகராறில் ராணுவ வீரரை தாக்கிய தம்பி உள்பட 6 பேர் மீது வழக்குபோச்சம்பள்ளி,:கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த, குள்ளனூர் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன், 32. இவர் சென்னையில் ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார். தற்போது ஒரு மாத விடுமுறையில் வீட்டிற்கு வந்த இவர், தன் தந்தையிடம் சொத்தில் பங்கு கேட்டு தகராறில் ஈடுபட்டார். இதில் ஆத்திரமடைந்த மணிகண்டனின் தம்பி செந்தில்குமார், 28, எதற்கு சொத்தில் பங்கு கேட்டு தகராறு செய்கிறாய் எனக்கூறி, நண்பர்கள் ஐந்து பேருடன் சேர்ந்து மணிகண்டனை தாக்கியுள்ளார். அதை தடுக்க முயற்சித்த மணிகண்டனின் மைத்துனர் திருநாவுக்கரசும் தாக்கப்பட்டார். தலையில் காயமடைந்ததை அடுத்து மணிகண்டன், திருநாவுக்கரசு இருவரும் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். போச்சம்பள்ளி போலீசார், செந்தில்குமார் மற்றும் அவர் நண்பர்கள் உள்பட ஆறு பேர் மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.