உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / நின்றிருந்த வாகனம் மீதுலாரி மோதி டிரைவர் பலி

நின்றிருந்த வாகனம் மீதுலாரி மோதி டிரைவர் பலி

நின்றிருந்த வாகனம் மீதுலாரி மோதி டிரைவர் பலிகிருஷ்ணகிரி, : ஈரோடு மாவட்டம், அந்தியூர் சாலையை சேர்ந்தவர் மணிகண்டன், 30, லாரி டிரைவர். இவர் கடந்த, 21 இரவு கிருஷ்ணகிரி அருகே ஓசூர் - தர்மபுரி சாலையில் கிருஷ்ணகிரி பக்கமாக சென்றுள்ளார். அப்போது முன்னால் எந்த சிக்னலும் இன்றி நின்றிருந்த ஒரு லாரியின் பின்புறம் பயங்கரமாக மோதியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த மணிகண்டன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.அவருடன் பயணம் செய்த மற்றொரு லாரி டிரைவரான ஈரோடு வ.உ.சி., நகரை சேர்ந்த குப்புசாமி, 48, படுகாயம் அடைந்தார். அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு, கோவை தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ