அம்பேத்கர் படம் மீது சாணம் வீசிய இருவர் கைது
அம்பேத்கர் படம் மீது சாணம் வீசிய இருவர் கைதுஓசூர் : கிருஷ்ணகிரி மாவட்டம், பேரிகை அடுத்த நெரிகம் அருகே குள்ளு கிராமத்தில், சுவற்றில் வரையப்பட்டிருந்த அம்பேத்கர் படத்தின் மீது கடந்த சில நாட்களுக்கு முன் யாரோ மர்ம நபர்கள் மாட்டு சாணத்தை வீசிச்சென்றனர். சம்பந்தப்பட்டவர்களை கைது செய்யக்கோரி பொதுமக்கள் புகார் செய்த நிலையில், பேரிகை போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதில், குள்ளு கிராமத்தை சேர்ந்த வெங்கடேஷ், 27, மற்றும் மற்றொரு சமூகத்தை சேர்ந்த சென்னகிருஷ்ணன், 30, இடையே பணம் கொடுக்கல், வாங்கல் தகராறு இருந்தது. சென்னகிருஷ்ணன் மீது பழி போட, வெங்கடேஷ் மற்றும் அப்பகுதியை சேர்ந்த சசிக்குமார், 29, ஆகியோர் சேர்ந்து, அம்பேத்கர் படம் மீது மாட்டு சாணம் வீசியது தெரிந்தது. இருவரும் நெரிகம் வி.ஏ.ஓ., கார்த்திக் முன் நேற்று சரணடைந்தனர். அவர்களை, பேரிகை போலீசார் கைது செய்தனர்.