தீயணைப்புத்துறையின் மண்டல போட்டிகி.கிரி, தர்மபுரி மாவட்டம் சாம்பியன்
தீயணைப்புத்துறையின் மண்டல போட்டிகி.கிரி, தர்மபுரி மாவட்டம் 'சாம்பியன்'கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கில், தீயணைப்பு மீட்புப்பணிகள் துறை சார்பில், கோவை மேற்கு மண்டலம் மற்றும் சேலம் மண்டலம் ஒருங்கிணைந்து, தீயணைப்புத்துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு, துறை சார்ந்த போட்டிகள் மற்றும் விளையாட்டு போட்டிகள் கடந்த, 2 நாட்களாக நடந்தது.இதில், கோவை, நீலகிரி, திண்டுக்கல், திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய, 9 மாவட்டங்களில் இருந்து, 210 பேர் பங்கேற்றனர். இவர்களுக்கு துறை சார்ந்த போட்டிகள் நடத்தப்பட்டன. இதில், கிருஷ்ணகிரி, தர்மபுரி ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தையும், துறை சார்ந்த போட்டிகளில் முதலிடத்தையும் வென்றன. சேலம், நாமக்கல் அணி, 2ம் இடத்தையும், ஈரோடு அணி, 3ம் இடத்தையும் பிடித்தன.வெற்றி பெற்றி அணிகள் மற்றும் தனிநபர்களுக்கு, மண்டல விளையாட்டு போட்டி குழுத்தலைவரும், தீயணைப்புத் துறை இணை இயக்குனருமான சரவணகுமார் மற்றும் மண்டல விளையாட்டு போட்டி குழு ஒருங்கிணைப்பாளரும், துணை இயக்குனருமான கல்யாணகுமார் ஆகியோர், பரிசு, சான்றிதழ்களை வழங்கினர்.முதலிடத்தில் வெற்றி பெற்றவர்கள் ஒரு குழுவாக அமைத்து, மாநில அளவில் மதுரையில் நடக்கும் போட்டிகளில் பங்கேற்க உள்ளனர்.