புளியம்பட்டியில் ஏ.டி.எம்., மதுக்கடையால்சாக்கடையில் விழுந்து தொழிலாளி சாவு
புளியம்பட்டியில் 'ஏ.டி.எம்.,' மதுக்கடையால்சாக்கடையில் விழுந்து தொழிலாளி சாவுபுன்செய்புளியம்பட்டி:புன்செய்புளியம்பட்டி நகராட்சியை ஒட்டியுள்ள எரங்காட்டுப்பாளையம் செல்லும் இணைப்பு சாலையில் சாக்கடை வடிகால் உள்ளது. நேற்று காலை, 45 வயது மதிக்கத்தக்க ஆண் சாக்கடை கழிவு நீரில் பிணமாக கிடந்தார். புன்செய்புளியம்பட்டி போலீசார் உடலை மீட்டு, சத்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் கோவை, கணபதியை சேர்ந்த பாலகிருஷ்ணன், 46, என்பது தெரிந்தது. கூலி தொழிலாளியான இவர், புளியம்பட்டியில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்தபோது, மது போதையில், சாக்கடை அருகே திட்டில் அமர்ந்திருந்தபோது தலைகுப்புற சாக்கடையில் விழுந்ததில் இறந்திருக்கலாம் என்பதும் தெரிய வந்தது.எரங்காட்டுப்பாளையம் இணைப்பு சாலையில், 24 மணி நேரமும் மது விற்பனை நடக்கிறது. மது வாங்கும் பலர் அங்கேயே அமர்ந்து குடிக்கின்றனர். இந்த வகையில் பாலகிருஷ்ணன், சட்ட விரோத கடையில் மது வாங்கி குடித்துவிட்டு, திட்டில் அமர்ந்திருந்தபோது விழுந்து இறந்துள்ளார்.அடுத்த பலி நேரிடும் முன், சட்டவிரோத மது விற்பனையை தடுக்க, போலீசார் நடவடிக்கை எடுக்க, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.