உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / விளைநிலத்துக்கு செல்லும் பாதை அடைப்புகலெக்டரிடம் கிராம மக்கள் முறையீடு

விளைநிலத்துக்கு செல்லும் பாதை அடைப்புகலெக்டரிடம் கிராம மக்கள் முறையீடு

விளைநிலத்துக்கு செல்லும் பாதை அடைப்புகலெக்டரிடம் கிராம மக்கள் முறையீடுஈரோடு:விவசாய நிலத்துக்கு செல்லும் பாதையை அடைத்து விட்டதால், விளைநிலத்துக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக, விவசாயிகள் கலெக்டரிடம் மனு கொடுத்து புலம்பினர்.கோபி தாலுகா அலிங்கியம் பஞ்., கோட்டுப்புள்ளாம் பாளையம், உருமம்பாளையம் பகுதி மக்கள், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் வழங்கிய மனுவில் கூறியதாவது:கோட்டுப்புள்ளாம்பாளையம் கிராமத்தில், 40 ஏக்கருக்கு மேல் விளை நிலம் உள்ளது. இந்நிலங்களை கடந்து பல விவசாய நிலங்கள் உள்ளன. இவற்றுக்கு செல்லும் பொதுப்பாதையை பல ஆண்டாக பயன்படுத்தி வருகிறோம்.இரு மாதங்களுக்கு முன் சிலர் பாதையை மறித்து, கம்பி வேலி அமைத்து அடைத்து விட்டனர். இதனால் நிலத்துக்கு செல்ல முடியாமல் விவசாயிகள் சிரமப்படுகின்றனர். விளை பொருட்கள், பிற பொருட்களை கொண்டு செல்லவும், எடுத்து வரவும் முடியவில்லை. பள்ளி குழந்தைகளும் அவ்வழியாக செல்ல முடியவில்லை.மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து, கம்பி வேலியை அகற்றி வழிப்பாதையை பயன்பாட்டுக்கு வழங்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ