உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / மகா ஆதி முனீஸ்வரர் கோவில்வருஷாபிஷேக விழா துவக்கம்

மகா ஆதி முனீஸ்வரர் கோவில்வருஷாபிஷேக விழா துவக்கம்

மகா ஆதி முனீஸ்வரர் கோவில்வருஷாபிஷேக விழா துவக்கம்ஓசூர்:ஓசூர், ராயக்கோட்டை சாலையிலுள்ள ராஜகணபதி நகரிலுள்ள மகா ஆதி முனீஸ்வரர், முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் வளாகத்தில், செல்வ விநாயகர், வள்ளி, தெய்வானை சமேத முருக பெருமான், விஷ்ணு, துர்க்கை, நாகராஜா, நாகதேவி, சரநாராயண பெருமாள், பாசுபதேஸ்வரர், காலபைரவர் மற்றும் நவக்கிரகங்கள் சன்னதி உள்ளன. இக்கோவில் வருஷாபிஷேக விழா மற்றும் சப்த மாதாக்கள், தாக்சாயினி அம்மன் சிலைகள் பிரதிஷ்டை செய்யும் விழா நேற்று முன்தினம் துவங்கியது.அன்று அதிகாலை, 5:30 மணிக்கு பந்தகால் நடுதல், கணபதி பூஜை, காப்புக்கட்டுதல், கணபதி ஹோமம், பரதநாட்டியம் மற்றும் சப்த மாதாக்கள், தாக்சாயினி அம்மன் பிரதிஷ்டை, நேற்று காலை, 6:00 மணிக்கு கலச பூஜை, கோ பூஜை மற்றும் மாலை, 5:30 மணிக்கு உற்சவர் ஊர்வலம் புறப்படுதல் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன. ஏற்பாடுகளை, மாநகராட்சி பொது சுகாதார குழு தலைவர் மாதேஸ்வரன் மற்றும் அர்ச்சகர் சேஷாத்திரி மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ