உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / மும்மொழி கல்வி கொள்கைக்குஆதரவாக கையெழுத்து இயக்கம்

மும்மொழி கல்வி கொள்கைக்குஆதரவாக கையெழுத்து இயக்கம்

மும்மொழி கல்வி கொள்கைக்குஆதரவாக கையெழுத்து இயக்கம் கிருஷ்ணகிரி,:கிருஷ்ணகிரி ரவுண்டானா அருகில், கிழக்கு மாவட்ட, பா.ஜ., சார்பில், நேற்று மாலை மும்மொழி கல்விக் கொள்கைக்கு ஆதரவு தெரிவித்து கையெழுத்து இயக்கம் துவக்கப்பட்டது. முன்னாள் எம்.எல்.ஏ., சிவபிரகாசம், நெசவாளர் பிரிவு மாநிலத் தலைவர் பாலமுருகன் ஆகியோர் பங்கேற்றனர். கிழக்கு மாவட்ட தலைவர் கவியரசு தலைமை வகித்து பேசினார். தொடர்ந்து, பா.ஜ.,வினர் மற்றும் பொதுமக்களிடம் மும்மொழி கல்விக் கொள்கைக்கு ஆதரவாக கையெழுத்து பெறப்பட்டது. நிகழ்ச்சியில், முன்னாள் மாவட்ட தலைவர் சிவபிரகாசம், கையெழுத்து இயக்க பொறுப்பாளர் செந்தில், தேசிய ஹஜ் கமிட்டி துணைத்தலைவர் முனவரி பேகம் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ