உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / பாம்பாறு அணையில் இருந்து பாசனத்திற்குஉடனடியாக தண்ணீர் திறக்க வேண்டுகோள்

பாம்பாறு அணையில் இருந்து பாசனத்திற்குஉடனடியாக தண்ணீர் திறக்க வேண்டுகோள்

பாம்பாறு அணையில் இருந்து பாசனத்திற்குஉடனடியாக தண்ணீர் திறக்க வேண்டுகோள்ஊத்தங்கரை:கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையில் பாம்பாறு அணை அமைந்துள்ளது. இந்த அணையில் இருந்து ஆண்டு தோறும், பிப்ரவரி முதல் வாரத்தில் இரண்டாம் போக பாசனத்திற்கு தண்ணீர் திறப்பது வழக்கம். ஆனால், மார்ச் மாதமாகியும் தண்ணீர் திறக்கவில்லை. இதனால், நெற்பயிர், பருத்தி, கரும்பு, ராகி, நிலக்கடலை பயிர்கள் காய்ந்து வருகின்றன. இதனால், உடனடியாக அணையில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும் என, பாசன விவசாய சங்க தலைவர்கள் மற்றும் விவசாயிகள், பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.இந்நிலையில், நேற்று பாம்பாறு அணை தங்கும் விடுதியில், பொதுப்பணித்துறை ஆலோசனை கூட்டம் நடந்தது. அதில் மார்ச், 20 முதல், 120 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விடப்படும். பெஞ்சல் புயல் பாதிப்பால் பாசன வாய்க்கால் முழுவதும் சேதமடைந்துள்ளது. சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. விரைவில் சீரமைத்து தண்ணீர் திறந்துவிட வேண்டும் பாம்பாறு அணை பாசன வாய்க்காலில் கடைமடை வரை தண்ணீர் செல்ல விவசாயிகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.உதவி செயற்பொறியாளர் ஆறுமுகம், உதவி பொறியாளர் ஜெயக்குமார், பாசன விவசாயிகள், விவசாயிகள் சங்க தலைவர், ஆயக்கட்டு பிரதிநிதி கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை