உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / பள்ளி வளாகத்தை சுத்தம் செய்துஅசத்திய முன்னாள் மாணவர்கள்

பள்ளி வளாகத்தை சுத்தம் செய்துஅசத்திய முன்னாள் மாணவர்கள்

பள்ளி வளாகத்தை சுத்தம் செய்துஅசத்திய முன்னாள் மாணவர்கள்ஓசூர்கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அடுத்த சாமல்பள்ளம் அருகே இம்மிடிநாயக்கனப்பள்ளியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில், 2004 - 05ம் ஆண்டு, 10ம் வகுப்பு படித்த முன்னாள் மாணவர்கள், 20 ஆண்டுக்கு பின் பள்ளியில் ஒன்றாக சந்தித்தனர். முன்னாள் தலைமையாசிரியர்கள் பக்தநாதன், கார்த்திகேயனி தலைமை வகித்தனர். ஆசிரியர்கள் பிரியா, மலர்விழா, ஜெயப்பிரகாஷ், இளங்கோ, குப்புசாமி, தீர்த்தகிரி முன்னிலை வகித்தனர். 60க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் குடும்பத்துடன் பங்கேற்று, ஒருவருக்கு ஒருவர் பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.குழு புகைப்படம் எடுத்து கொண்டனர். தங்களுக்கு பாடம் கற்று கொடுத்த ஆசிரியர்களுக்கு நினைவு பரிசுகளை வழங்கி கவுரவித்தனர். முன்னாள் மாணவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து, பள்ளி வளாகத்தை சுத்தம் செய்து, குடிநீர் குழாய்களை சரிசெய்து கொடுத்தனர். மறைந்த ஆசிரியர்களான ஜெயலட்சுமி, கிருஷ்ணவேணி, கிருஷ்ணகுமார் மற்றும் மறைந்த முன்னாள் மாணவர்களுக்கு, மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !