உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / எல்லையில் காயத்துடன் ஆண் சடலம் இரு மாநில போலீசார் விசாரணை

எல்லையில் காயத்துடன் ஆண் சடலம் இரு மாநில போலீசார் விசாரணை

எல்லையில் காயத்துடன் ஆண் சடலம் இரு மாநில போலீசார் விசாரணைஓசூ:கர்நாடகா மாநில எல்லையில், காயத்துடன் ஆண் சடலம் கிடந்த நிலையில், அம்மாநில போலீசார், தமிழக போலீசாருடன் சேர்ந்து விசாரணை நடத்தினர்.தமிழக எல்லையில் இருந்து, 2.5 கி.மீ., துாரத்தில், கர்நாடகா மாநில எல்லையான அத்திப்பள்ளி அருகே தனியார் நிலத்தில், 35 வயது மதிக்கத்தக்க ஆண் இறந்து கிடந்துள்ளார். அத்திப்பள்ளி போலீசார் அங்கு சென்று சடலத்தை மீட்டு விசாரித்தனர். வாயில் ரத்தம் வழிந்த நிலையிலும், உடலில் முள் கம்பிகள் உடலில் குத்தியது போன்ற ரத்த காயங்களும், வெட்டு காயங்களும் இருந்தன. தமிழக எல்லையை ஒட்டி சடலம் கிடந்ததால், ஓசூர் பகுதியை சேர்ந்த நபராக இருக்கலாம் என, அத்திப்பள்ளி போலீசார் சந்தேகமடைந்து, தமிழக போலீசார் உதவியுடன் விசாரணை நடத்தினர். ஆனால், இறந்த நபர் யார் என்ற விபரத்தை கண்டறிய முடியவில்லை. விபத்தில் சிக்கி துாக்கி வீசப்பட்டு அந்த நபர் உயிரிழந்திருக்கலாம் அல்லது அவரை கொலை செய்து சடலத்தை, தனியார் நிலத்தில் வீசி சென்றிருக்கலாம் என, அத்திப்பள்ளி போலீசார் சந்தேகிக்கின்றனர். சந்தேக மரணம் என போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர். இறந்த நபர் தமிழகத்தை சேர்ந்தவரா என, மத்திகிரி போலீசாரும் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !