உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / ஓசூரில் டாக்டர்கள் மீது தாக்குதல்பா.ஜ., நிர்வாகி உட்பட மூவர் கைது

ஓசூரில் டாக்டர்கள் மீது தாக்குதல்பா.ஜ., நிர்வாகி உட்பட மூவர் கைது

ஓசூரில் டாக்டர்கள் மீது தாக்குதல்பா.ஜ., நிர்வாகி உட்பட மூவர் கைதுஓசூர்:ஓசூர், ஜூஜூவாடி உப்கார் ராயல் கார்டன் லே அவுட்டை சேர்ந்த நவீன்குமார், 27. இவரது உறவினரான பெண் ஒருவருக்கு, ஓசூர் ஏரித்தெருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் குழந்தை பிறந்துள்ளது. அதை பார்க்க நேற்று முன்தினம் நள்ளிரவு நவீன்குமார் சென்றார். அவரை அனுமதிக்காத நிலையில், டாக்டர் ராம்பிரபாகர் என்பவருடன் தகராறு செய்து, அவரை தாக்கி விட்டு அங்கிருந்து சென்றார். மீண்டும் தன் நண்பர்களை அழைத்து கொண்டு மருத்துவமனைக்கு சென்றவர், மருத்துவமனை நிர்வாக இயக்குனரான டாக்டர் அக்சய்ராம் என்பவரை தாக்கினார்.இது தொடர்பாக, டாக்டர் ராம்பிரபாகர் புகார் படி, ஓசூர் டவுன் போலீசார், நவீன்குமார் மற்றும் ஓசூர் தேர்ப்பேட்டையை சேர்ந்த, பா.ஜ., உறுப்பினரான விக்னேஷ், 28, பா.ஜ., ஆன்மிக மற்றும் ஆலய மேம்பாட்டு பிரிவு கிழக்கு மண்டல தலைவர் அம்ரேஷ், 26, ஆகிய, 3 பேரை நேற்று கைது செய்து, 7 பேரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை