பார்லி.,யில் எதிர்க்கட்சிகள் பேச வாய்ப்பளிப்பதில்லைகிருஷ்ணகிரி காங்.,- எம்.பி., குற்றச்சாட்டு
பார்லி.,யில் எதிர்க்கட்சிகள் பேச வாய்ப்பளிப்பதில்லைகிருஷ்ணகிரி காங்.,- எம்.பி., குற்றச்சாட்டுஓசூர்:''பார்லிமென்டில் எதிர்க்கட்சிகள் பேச வாய்ப்பளிப்பதில்லை,'' என, கிருஷ்ணகிரி காங்.,- எம்.பி., கோபிநாத் கூறினார்.ஓசூரில் நேற்று நிருபர்களிடம் கோபிநாத் கூறியதாவது: இப்போதும் சரி, இதற்கு முன்பும் சரி, பா.ஜ., தலைமையிலான மத்திய அரசு, எதிர்க்கட்சிகளை பார்லி.,யில் பேச அனுமதிக்கவில்லை. பார்லி அமர்வுகள் நேரடியாக ஒளிபரப்பப்படுகின்றன. ஆனால், எதிர்க்கட்சிகள் ஏதாவது சொல்ல முயற்சிக்கும் போது, மக்களுக்கு தெரியாதபடி இருட்டடிப்பு செய்யப்படுகிறது. மைக்கை ஆப் செய்து விடுகின்றனர். பா.ஜ., தலைமையிலான மத்திய அரசு எந்த விமர்சனத்தையும் கேட்க விரும்புவதில்லை. விவாதங்கள் ஜனநாயகத்தின் மிக முக்கியமான பகுதியாகும். ஆனால், விவாதங்களை கேட்க மத்திய அரசு விரும்புவதில்லை. கடந்த, 2019 முதல் தற்போது வரை, துணை சபாநாயகர் இல்லை. எதிர்க்கட்சிகள் பேச வாய்ப்பளிப்பதில்லை. கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயம் சார்ந்து பேச வேண்டும் என பலமுறை வாய்ப்பு கேட்டு காத்திருந்த போதும் எனக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை. ஜனநாயகத்தின் குரல்வலையை மத்திய அரசு நசுக்குகிறது. ஓசூர் - ஜோலார்பேட்டை திட்டத்திற்கு, எனக்கு முன்னால் இருந்த எம்.பி.,க்கள் அனைவரும் முயற்சி செய்தனர். நானும் கொண்டு வர முயற்சி செய்து வருகிறேன். பாகலுார் சாலை டெண்டர் விடப்பட்டுள்ளது. பணிகள் விரைவில் துவங்கும். இவ்வாறு, அவர் கூறினார்.மேற்கு மாவட்ட பொறுப்பாளர் நீலகண்டன், ஓசூர் தொகுதி பொறுப்பாளர் மைஜா அக்பர், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் சின்னகுட்டப்பா, மாநில செயற்குழு உறுப்பினர் சூர்யகணேஷ், கவுன்சிலர்கள் பாக்கியலட்சுமி, இந்திராணி உட்பட பலர் உடன் இருந்தனர்.