உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / பயிர்களை நாசம் செய்த யானைகள் விரட்டியடிப்பு

பயிர்களை நாசம் செய்த யானைகள் விரட்டியடிப்பு

பயிர்களை நாசம் செய்த யானைகள் விரட்டியடிப்புஓசூர், : கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே தாவரக்கரை வனப்பகுதியில் இருந்து நேற்று முன்தினம் இரவு வெளியேறிய, 20க்கும் மேற்பட்ட யானைகள், ஒசட்டி, தாவரக்கரை, கண்டகானப்பள்ளி கிராமங்களில் புகுந்து, ராகி, சோளம், துவரை, அவரை போன்ற பயிர்களை தின்றும், காலால் மிதித்தும் நாசம் செய்தன. அங்கிருந்து விவசாயிகள் விரட்டியதால், அருகில் இருந்த பத்தியப்பா என்பவரது மாந்தோப்பில் யானைகள் தஞ்சமடைந்தன. இதையறிந்த வனத்துறையினர் யானைகள் நடமாட்டத்தை கண்காணித்தனர். மாலையில், மக்கள் நடமாட்டம் குறைந்த பின், பட்டாசு வெடித்து தாவரக்கரை வனப்பகுதி நோக்கி யானைகளை விரட்டினர். அதேபோல், மட்ட மத்திகிரி கிராமத்திற்குள் புகுந்த, 3 யானைகள் விவசாய பயிர்களை நாசம் செய்தன. கிராம மக்கள் பட்டாசு வெடித்து, நொகனுார் வனப்பகுதிக்குள் விரட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ