உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / காவேரி மருத்துவமனை சார்பில்தேசிய பாதுகாப்பு வார விழா

காவேரி மருத்துவமனை சார்பில்தேசிய பாதுகாப்பு வார விழா

காவேரி மருத்துவமனை சார்பில்தேசிய பாதுகாப்பு வார விழாஓசூர்:கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் காவேரி மருத்துவமனை மற்றும் போலீசார் சார்பில், தேசிய பாதுகாப்பு வார விழா நடந்தது.ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து, வாகன ஓட்டிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தேன்கனிக்கோட்டை சாலையில், ஹெல்மெட் அணிந்து கொண்டு இருசக்கர வாகனங்களை ஓட்டி வந்தவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. ஹெல்மெட் அணியாமல் வந்தவர்களை, அதன் அவசியத்தை எடுத்து கூறி, தள்ளுபடி விலையில் ஹெல்மெட் பெறும் வகையில் கூப்பன் வழங்கப்பட்டது. காவேரி மருத்துவமனை மருத்துவ இயக்குனர் டாக்டர் அரவிந்தன், பொது மேலாளர் ஜோஷ்வர்கீஸ் ஜாய், மார்க்கெட்டிங் உதவி பொது மேலாளர் பிந்துகுமாரி, மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் ஸ்ரீராமஜெயம் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை