குழந்தைகள் நல பிரிவுக்குதேசிய தர சான்றிதழ்
குழந்தைகள் நல பிரிவுக்குதேசிய தர சான்றிதழ்கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி போலுப்பள்ளியில் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை இயங்கி வருகிறது. இங்குள்ள குழந்தைகள் நலப் பிரிவு, தேசிய தரச்சான்றிதழ் பெற்றது. இதையடுத்து, அரசு மருத்துவ கல்லுாரி முதல்வர் பூவதி மற்றும் மருத்துவர்கள், சுகாதார பணியாளர்கள் கலெக்டர் சரயுவிடம் நேற்று வாழ்த்து பெற்றனர். மருத்துவ கல்லுாரி மருத்துவமனை கண்காணிப்பாளர் சந்திரசேகரன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) ராமஜெயம், கனிம வள துணை இயக்குனர் ஜெயபால் மற்றும் மருத்துவர்கள், சுகாதார பணியாளர்கள் கலந்து கொண்டனர்.