ஓடும் காரில் தீ விபத்து
ஓடும் காரில் தீ விபத்துஓசூர்:தர்மபுரியிலிருந்து ஓசூர் வழியாக பெங்களூரு நோக்கி நேற்று மதியம் ஹூண்டாய் ஐ -20 கார் சென்றது. கர்நாடகா மாநில எல்லையான அத்திப்பள்ளி ஆர்ச் அருகே சென்றபோது, காரின் முன்பகுதியில் புகை வந்தது. டிரைவர் காரை நிறுத்தி விட்டு கீழே இறங்கினார். உடனே காரில் தீப்பிடித்து, முழுவதும் எரிந்து நாசமானது. கர்நாடகா மாநில தீயணைப்புத்துறையினர் காரில் ஏற்பட்ட தீயை அணைத்தனர். அத்திப்பள்ளி போலீசார் விசாரித்த போது, தர்மபுரியில் இருந்து சங்கர் என்பவர் காரில் வந்ததும், அவர் கார் தீப்பிடித்தவுடன் மாற்று வாகனத்தில் பெங்களூருக்கு அவசர வேலையாக சென்றதும் தெரிந்தது. அத்திப்பள்ளி போலீசார், சாலையில் எரிந்த நிலையில் நின்றிருந்த காரை, பொக்லைன் வாகனம் மூலம் அகற்றி விசாரித்து வருகின்றனர்.