முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள்தி.மு.க.,வினர் கொண்டாட்டம்
முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள்தி.மு.க.,வினர் கொண்டாட்டம்கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி மாவட்டத்தில், தி.மு.க., தலைவரும், தமிழக முதல்வருமான ஸ்டாலின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.கிருஷ்ணகிரி புதிய பஸ் ஸ்டாண்ட், அண்ணா சிலை அருகே முதல்வரும், தி.மு.க., தலைவருமான ஸ்டாலினின், 72வது பிறந்தநாளை முன்னிட்டு, 72 கிலோ கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. கிருஷ்ணகிரி, தி.மு.க., நகர பொறுப்பாளர்கள் அஸ்லம், வேலுமணி ஏற்பாட்டில் நடந்த நிகழ்ச்சிக்கு, கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட அவைத்தலைவர் தட்ரஹள்ளி நாகராஜ் தலைமை வகித்தார். தொ.மு.ச., மாநில துணைத் தலைவர் கிருஷ்ணன், மாவட்ட துணை செயலாளர் சாவித்திரி கடலரசு மூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இதில் அனைவருக்கும் இனிப்புகளோடு, பழம், ஜூஸ் உள்ளிட்டவை வழங்கப்பட்டன. தொடர்ந்து, கிருஷ்ணகிரி ராயக்கோட்டை மேம்பாலம் அருகிலுள்ள கருணாநிதி சிலை, ஐந்துரோடு ரவுண்டானா பகுதியில் உள்ள அண்ணா சிலை அருகில் கேக் வெட்டி, இனிப்பு, பழங்கள் வழங்கி கொண்டாடப்பட்டது. தொடர்ந்து, தி.மு.க., தலைமை அறிவித்த 'ஒரே இலக்கு: தமிழ்நாடு போராடும்; தமிழ்நாடு வெல்லும்,' உறுதிமொழி ஏற்கப்பட்டது.கிருஷ்ணகிரி தி.மு.க., கிழக்கு மாவட்ட நிர்வாகிகள், நகராட்சி கவுன்சிலர்கள், மகளிரணியினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.