உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / விவசாயி கொலையில் சித்தப்பா மகன் கைது

விவசாயி கொலையில் சித்தப்பா மகன் கைது

விவசாயி கொலையில் சித்தப்பா மகன் கைதுபோச்சம்பள்ளி:கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த, ஜம்புகுட்டப்பட்டியை சேர்ந்தவர் சக்திவேல், 47, விவசாயி. இவர் கடந்த, 2024 டிச., 28 இரவு, 8:00 மணிக்கு ஜம்புகுட்டப்பட்டியிலிருந்து டி.வி.எஸ்., சுசுகி மேக்ஸ் 100 பைக்கில் தனியார் பள்ளியில் படித்து வரும் தன் மகனை வீட்டிற்கு அழைத்து வர கோணனுார் சென்றார். அப்போது சக்திவேல், பைக்குடன் கீழே விழுந்து காயமடைந்த அவரை சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்த நிலையில் உயிரிழந்தார். சக்திவேல் இறப்பு குறித்து போச்சம்பள்ளி போலீசார் சந்தேக மரணமாக வழக்குப்பதிந்து தொடர்ந்து, 60 நாட்களாக விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் சக்திவேலை, அதே பகுதியை சேர்ந்த அவரின் சித்தப்பா மாதுவின் மகன் சபரி, 29, என்பவர் கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து போச்சம்பள்ளி இன்ஸ்பெக்டர் நாகலட்சுமி, சந்தேக மரண வழக்கை, கொலை வழக்காக மாற்றி சபரியை கைது செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ