பிரதம மந்திரி இன்டர்ன்சிப் பயிற்சி
பிரதம மந்திரி இன்டர்ன்சிப் பயிற்சிஓசூர்:தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் சார்பில், ஓசூர் அதியமான் பாலிடெக்னிக் கல்லுாரியில், பிரதம மந்திரியின் இன்டர்ன்சிப் பயிற்சி திட்டத்தில், மாணவர் சேர்க்கை முகாம் நடந்தது. கல்லுாரி முதல்வர் ராஜரத்தினம் தலைமை வகித்தார். மாவட்ட திறனறி அலுவலக இணை இயக்குனர் பன்னீர்செல்வம் முன்னிலை வகித்தார். மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இருந்து, பல்வேறு துறை அலுவலர்கள் பங்கேற்று பேசினர். தகுதியின் அடிப்படையில் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். கல்லுாரி துறை தலைவர் மற்றும் வேலை வாய்ப்பு அலுவலர் பாலாஜி பிரகாஷ் நன்றி கூறினார்.