அரசு டவுன் பஸ்சிற்குள் மழைகுடையுடன் பயணித்த மக்கள்
அரசு டவுன் பஸ்சிற்குள் மழைகுடையுடன் பயணித்த மக்கள்தேன்கனிக்கோட்டை:தேன்கனிக்கோட்டையிலிருந்து, ஓசூருக்கு, 44ம் நெம்பர் அரசு டவுன் பஸ் இயக்கப்படுகிறது. நேற்றிரவு, 8:50 மணிக்கு, 50க்கும் மேற்பட்ட பயணிகளுடன், தேன்கனிக்கோட்டையில் இருந்து ஓசூர் நோக்கி பஸ் சென்றது. வெங்கடேசன் என்பவர் பஸ்சை ஓட்டினார். கண்டக்டராக ஹரிஸ் என்பவர் இருந்தார். அப்போது தேன்கனிக்கோட்டை சுற்றுவட்டாரத்தில் கனமழை பெய்ததால், பாடாவதியான அந்த பஸ்சிற்குள் மழைநீர் ஒழுகியது. அதனால், பயணிகள் இருக்கைகளில் அமர முடியாமல் நின்றபடி பயணம் செய்தனர். பலர் நனைந்தபடியும், சிலர் குடையை பிடித்து கொண்டும் பயணித்தனர். பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டர் இருக்கைக்கு மேல் பகுதியிலும் மழைநீர் ஒழுகியது.அதனால் டிரைவர், கண்டக்டர் மற்றும் பயணிகள், தங்கள் கையில் இருந்த துண்டை எடுத்து தலையில் போட்டு கொண்டனர். இதே டவுன் பஸ், கடந்த வாரம் தேன்கனிக்கோட்டையில் இருந்து ஓசூர் சென்றபோது, பஸ்சின் ஹெட்லைட் எரியவில்லை. அதனால் ஓசூருக்கு பயணிகளை ஆபத்தான முறையில் டிரைவர் அழைத்து சென்றார். இதுபோன்று நடப்பது தொடர் கதையாக இருந்தும், பஸ் டிப்போ அதிகாரிகள், பஸ்சை சரி செய்யாமல் இருப்பது வேதனை அளிக்கிறது என பயணிகள் குற்றம்சாட்டினர்.