உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / வேளாண் விளை பொருள் ரூ.34.43 லட்சத்துக்கு ஏலம்

வேளாண் விளை பொருள் ரூ.34.43 லட்சத்துக்கு ஏலம்

வேளாண் விளை பொருள் ரூ.34.43 லட்சத்துக்கு ஏலம்அந்தியூர்:அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று நடந்த ஏலத்துக்கு, 5,௦௦௦ தேங்காய் வரத்தானது. ஒரு கிலோ, 39.75 - 59.68 ரூபாய்க்கு விற்றது.தேங்காய் பருப்பு, 59 மூட்டை வரத்தாகி, ஒரு கிலோ, 138.91 - 152.19 ரூபாய்; ஆமணக்கு ஏழு மூட்டை வரத்தாகி கிலோ, 60.09 - 76.91 ரூபாய்; மக்காச்சோளம் ஐந்து மூட்டை வரத்தானது. துவரை, 514 மூட்டை வரத்தாகி, கிலோ, 70.50 - 79.50 ரூபாய் என, 28.35 லட்சம் ரூபாய்க்கு விற்றது. பச்சைப்பயிறு இரண்டு மூட்டை, தட்டைப்பயிறு நான்கு மூட்டை, உளுந்து ஒன்பது மூட்டை, நரிப்பயிறு, 14 மூட்டை, கொள்ளு, 31 மூட்டை, அவரை நான்கு மூட்டை வரத்தானது. அனைத்து விளைபொருட்களும், 34.43 லட்சம் ரூபாய்க்கு விற்றது.* சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் நேற்று நடந்த ஏலத்தில் ஒரு கிலோ மல்லிகை பூ, 1,400 ரூபாய்க்கு ஏலம் போனது. முல்லை-1,160 ரூபாய், காக்கடா-400, செண்டுமல்லி- 38, கோழிகொண்டை-110, ஜாதிமுல்லை-1,000, கனகாம்பரம்-410, சம்பங்கி-60, அரளி-160, துளசி-40, செவ்வந்தி-160 ரூபாய்க்கும் விற்பனையானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ