உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / மாணவி உட்பட மூவர் மாயம்

மாணவி உட்பட மூவர் மாயம்

மாணவி உட்பட மூவர் மாயம்கிருஷ்ணகிரி,:ஊத்தங்கரையை சேர்ந்த, 14 வயதுள்ள, 10ம் வகுப்பு மாணவன். கடந்த, 20ல் வீட்டிலிருந்து வெளியே சென்றவர் மாயமானார். மாணவனின் பெற்றோர் அளித்த புகார் படி, ஊத்தங்கரை போலீசார் விசாரிக்கின்றனர். கிருஷ்ணகிரி, சாந்தி நகரை சேர்ந்த முதியவர் சக்திவேல், 76, பைனான்ஸ் நடத்தி வருகிறார். கடந்த, 20 இரவு வீட்டை விட்டு வெளியே சென்றவர் மாயமானார். அவர் மனைவி புகார் படி, கிருஷ்ணகிரி டவுன் போலீசார் விசாரிக்கின்றனர். கிருஷ்ணகிரி அடுத்த கம்பம்பள்ளியை சேர்ந்தவர் நித்யா, 20, கல்லுாரி மாணவி. கடந்த, 20ல், கல்லுாரி செல்வதாக கூறி சென்றவர் மாயமானார். மாணவியின் பெற்றோர் மகாராஜகடை போலீசில் புகார் அளித்தனர். அதில் கம்பம்பள்ளி அடுத்த கொட்டாவூரை சேர்ந்த பாலாஜி, 25, என்ற வாலிபர் மீது சந்தேகம் இருப்பதாக தெரிவித்துள்ளனர். அதன்படி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ