உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / விபத்தில் லாரி டிரைவர் பலி

விபத்தில் லாரி டிரைவர் பலி

விபத்தில் லாரி டிரைவர் பலிஊத்தங்கரை:ஊத்தங்கரை அடுத்த, எக்கூர் அருகே உள்ள பூசாரிக்கொட்டாயை சேர்ந்தவர் திருமூர்த்தி, 27. லாரி டிரைவர். அதே பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி ஜெய்சங்கர், 24. இருவரும், நேற்று முன்தினம் இரவு, 10:00 மணியளவில் மகனுார்பட்டியிலிருந்து, பைக்கில் திருப்பத்துார் சிங்காரப்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில், படத்தானுார் அருகே வந்தனர். அப்போது, எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் திருமூர்த்தி சம்பவ இடத்திலேயே பலியானார். படுகாயமடைந்த ஜெய்சங்கர் தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். சிங்காரப்பேட்டை போலீசார் திருமூர்த்தி உடலை மீட்டு விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை