உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / பூம்புகார் கைவினை பொருட்கள் கண்காட்சி

பூம்புகார் கைவினை பொருட்கள் கண்காட்சி

பூம்புகார் கைவினை பொருட்கள் கண்காட்சிஓசூர்:சேலத்திலுள்ள தமிழ்நாடு கைத்தறி தொழில்கள் வளர்ச்சி கழகத்தின் பூம்புகார் விற்பனை நிலையம் சார்பில், கைவினை கலைஞர்களுக்கு சந்தை வாய்ப்பை உருவாக்கும் வகையில், நேரடி விற்பனை மற்றும் கண்காட்சி, ஓசூர் மீரா மகால் திருமண மண்டபத்தில், நேற்று துவங்கியது. ஓசூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., பிரகாஷ் துவக்கி வைத்தார். வரும், 23ம் தேதி வரை விற்பனை மற்றும் கண்காட்சி நடக்கிறது. இதில், கைவினை கலை பொருட்கள், கைத்தறி துணி வகைகள், அலங்கார நகைகள், சுவாமி மலை பஞ்சலோக சிலைகள், சந்தன கட்டைகள் உட்பட பல்வேறு பொருட்கள் இடம் பெற்றுள்ளன. 50 முதல், 65,000 ரூபாய் மதிப்பிலான பொருட்கள் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன. 15 லட்சம் ரூபாய் வரை விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அனைத்து பொருட்களுக்கும், 10 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுவதாக, பூம்புகார் மேலாளர் நரேந்திர போஸ் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி