மேலும் செய்திகள்
அ.தி.மு.க., பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டம்
03-Mar-2025
ரேஷன் கடை கட்ட பூஜைஊத்தங்கரை:கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை இந்திரா நகர் பகுதியிலுள்ள ரேஷன் கடை, தனியார் கட்டடத்தில் செயல்பட்டு வருகிறது. தற்போது அந்த கட்டடம் சேதமான நிலையில் உள்ளதால், புதியதாக கட்டடம் கட்டி கொடுக்க வேண்டும் என, ஊத்தங்கரை, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., தமிழ்செல்வத்திடம் பகுதி மக்கள் கோரிக்கை வைத்திருந்தனர். அதையேற்று எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, 10 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, ரேஷன் கடை கட்டடம் கட்டுவதற்கான பூமி பூஜை செய்து பணிகளை நேற்று துவக்கி வைத்தார். இதில், மாவட்ட துணை செயலாளர் சாகுல் அமீது, ஒன்றிய செயலாளர்கள் எக்கூர் வேடி, வேங்கன், நகர செயலாளர் ஆறுமுகம், சிறுபான்மை பிரிவு மாவட்ட துணை செயலாளர் பியாரேஜான், வார்டு கவுன்சிலர் விஜயகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
03-Mar-2025