உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / ஆதார் மையத்தில் காத்து கிடக்கும் மக்கள்

ஆதார் மையத்தில் காத்து கிடக்கும் மக்கள்

ஆதார் மையத்தில் காத்து கிடக்கும் மக்கள்ஊத்தங்கரை:ஊத்தங்கரை சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த மாணவர்கள், பொதுமக்கள் ஆதார் கார்டில் பெயர், முகவரி திருத்தம், மொபைல் எண் சேர்த்தலுக்காக, ஊத்தங்கரையிலுள்ள ஆதார் மையங்களில் தினசரி காத்துக் கிடக்கின்றனர். நேற்று, 300க்கும் மேற்பட்டோர் தாசில்தார் அலுவலகத்திலுள்ள ஆதார் மையத்தில் காலை முதலே காத்து கிடந்தனர். இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், 'ஊத்தங்கரையில் தாசில்தார் ஆபீஸ், போஸ்ட் ஆபீஸ், இந்தியன் பேங்க் மற்றும் பள்ளிகளில் என மொத்தம், 5 ஆதார் மையங்கள் உள்ளன. ஆனால் தாசில்தார் அலுவலகத்தில் உள்ளதை தவிர, மற்ற மையங்களில் சரியாக ஆதார் பணிகள் நடப்பதில்லை. இதனால், ஊத்தங்கரை மற்றும் அதன் சுற்றுவட்டாரத்திலுள்ள மாணவர்களும், பொதுமக்களும் ஒரே இடத்தில் குவிவதால், ஆதார் மைய பணியாளர் திணறுகிறார். இது குறித்து தாசில்தாரிடம் பலமுறை கூறியும், இதுவரை நடவடிக்கை இல்லை என, பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை