உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / சிந்தகும்மனப்பள்ளி ஊராட்சி துவக்கப்பள்ளி ஆண்டு விழா

சிந்தகும்மனப்பள்ளி ஊராட்சி துவக்கப்பள்ளி ஆண்டு விழா

சிந்தகும்மனப்பள்ளி ஊராட்சி துவக்கப்பள்ளி ஆண்டு விழாகிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சிந்தகும்மனப்பள்ளி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி ஆண்டு விழா நடந்தது. வட்டார கல்வி அலுவலர் மரியரோஸ் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் லுாத்தர் மகிமைதாஸ் வரவேற்றார்.பள்ளி ஆண்டு விழாவையொட்டி பள்ளி மாணவ, மாணவியருக்கு நடந்த விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கும், படிப்பில் சிறந்து விளங்கும் மாணவ, மாணவியருக்கும், பாராட்டி பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கப்பட்டன. தொடர்ந்து மாணவ, மாணவியரின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் மற்றும் கிராமிய கலைநிகழ்ச்சிகள், சமுதாய சீர்த்திருத்த நாடகங்கள் நடந்தன. வட்டார மேற்பார்வையாளர் வெங்கடேசன், ஆசிரியர் பயிற்றுனர் கஸ்துாரி, உதவி ஆசிரியர்கள் சிரஞ்சீவி, பிரசில்லா ராணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி