உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / ஹிந்து சமய அறநிலையத்துறைஆய்வாளர் அலுவலகம் திறப்பு

ஹிந்து சமய அறநிலையத்துறைஆய்வாளர் அலுவலகம் திறப்பு

ஹிந்து சமய அறநிலையத்துறைஆய்வாளர் அலுவலகம் திறப்புகிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரியில், 12 லட்சம் ரூபாய் மதிப்பில், ஹிந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர் அலுவலகத்தை, தி.மு.க., - எம்.எல்.ஏ., மதியழகன் திறந்து வைத்தார்.கிருஷ்ணகிரி, ஹிந்து அறநிலையத்துறை ஆய்வாளர் அலுவலகம், கிருஷ்ணன் கோவில் தெரு நவநீத வேணுகோபால சுவாமி ஆலயத்தில் செயல்பட்டு வந்தது. அதேபோல ஹிந்து அறநிலையத்துறை கிருஷ்ணகிரி உதவி கமிஷனர் அலுவலகம் வாடகை கட்டடத்தில் இயங்கி வருகிறது. இந்நிலையில் ஹிந்து அறநிலையத்துறை உதவி கமிஷனர் அலுவலகம் மற்றும் ஆய்வாளர் அலுவலகம் கட்ட, கிருஷ்ணகிரி, ராசுவீதியில் உள்ள சந்திர மவுலீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான நிலம், திருவண்ணாமலை மேம்பாலம் அருகிலுள்ள பகுதியில் ஒதுக்கப்பட்டது. ஹிந்து சமய அறநிலையத்துறை சார்பில், 12 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு, ஆய்வாளர் கட்டடம் கட்டி முடிக்கப்பட்டு நேற்று திறப்பு விழா நடந்தது.கட்டடத்தை, கிருஷ்ணகிரி, தி.மு.க., கிழக்கு மாவட்ட செயலாளர் மதியழகன் எம்.எல்.ஏ., திறந்து வைத்தார். கிருஷ்ணகிரி மண்டல ஹிந்து அறநிலையத்துறை உதவி கமிஷனர் ராமவேல், ஆய்வாளர்கள் கவிப்பிரியா, ராமமூர்த்தி, செயல் அலுவலர் சித்ரா, கிருஷ்ணகிரி, தி.மு.க., நகர பொறுப்பாளர்கள் அஸ்லம், வேலுமணி, கவுன்சிலர்கள் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை