உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / சாலையில் எச்சரிக்கை பலகைவாகன ஓட்டிகள் கோரிக்கை

சாலையில் எச்சரிக்கை பலகைவாகன ஓட்டிகள் கோரிக்கை

சாலையில் எச்சரிக்கை பலகைவாகன ஓட்டிகள் கோரிக்கைமொரப்பூர்:அரூரில் இருந்து கிருஷ்ணகிரி செல்லும் வழியில், நவலை ஏரிக்கரை சாலை அதிக வளைவுகளுடன் உள்ளது.இங்கு, தொடர் விபத்துகள் நிகழ்ந்ததால் சில ஆண்டுகளுக்கு முன், விபத்தை தடுக்கும் வகையில், சாலை அகலப்படுத்தப்பட்டு, இருபுறமும் தடுப்புக் கம்பிகள் அமைக்கப்பட்டன. இருந்தபோதிலும் இப்பகுதியில், வளைவுகளை குறிக்கும் எச்சரிக்கை பலகை இல்லை.அதேபோல், இங்குள்ள பாலத்தில் மின்விளக்கு வசதி இல்லை. இதனால், புதியதாக இவ்வழியில் வரும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி விடுகின்றனர். எனவே, வளைவு பகுதிகளில் எச்சரிக்கை அறிவிப்பு பலகை வைப்பதுடன், மின் விளக்கு வசதி செய்து கொடுக்க நெடுஞ்சாலை துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.கோவில் உண்டியல் திருட்டுகம்பைநல்லுார்:தர்மபுரி மாவட்டம், கம்பைநல்லுார் அடுத்த சேக்காண்டஹள்ளி கூட்ரோட்டில் செல்லியம்மன் கோவில் உள்ளது. இதில், நேற்று முன்தினம் மர்ம நபர்கள் கோவில் கதவின் பூட்டை உடைத்து உண்டியலை திருடிச் சென்றனர். புகாரின்படி கம்பைநல்லுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை