மேலும் செய்திகள்
மாணவி உட்பட 4 பெண்கள் மாயம்
22-Dec-2024
மாணவி உட்பட 4 பேர் மாயம்கிருஷ்ணகிரி: பர்கூர் தாலுகா, மாடரஹள்ளியை சேர்ந்தவர் ஜோதி, 39. இவரது கணவர் ஜெகன்நாதன். தம்பதிக்கு, 2 குழந்தைகள். கடந்த, 16 இரவு வீட்டிலிருந்து வெளியில் சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. கணவர் நேற்று முன்தினம் அளித்த புகார் படி, மத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.கிருஷ்ணகிரி அடுத்த பி.கே.பெத்தனப்பள்ளியை சேர்ந்தவர் அங்கிதை, 19. இரண்டாமாண்டு கல்லுாரி மாணவி. கடந்த, 16 இரவு வீட்டிலிருந்து வெளியில் சென்றவர், மீண்டும் வீடு திரும்பவில்லை. மாணவியின் பெற்றோர் குருபரப்பள்ளி போலீசில் புகாரளித்தனர். அதில், குருபரப்பள்ளியை சேர்ந்த ஆகாஷ், 26 என்பவர் மீது சந்தேகம் இருப்பதாக தெரிவித்துள்ளனர். அதன்படி போலீசார் விசாரிக்கின்றனர்.* வேலுார் மாவட்டத்தை சேர்ந்தவர், 18 வயது மாணவி; தனியார் நர்சிங் கல்லுாரியில், டிப்ளமோ நர்சிங் இரண்டாமாண்டு படிக்கிறார். ஓசூர் தனியார் மருத்துவமனையில், கடந்த, 2 மாதமாக செவிலியராக பயிற்சி பெற்று வந்தார். கடந்த, 16 மாலை, 5:00 மணிக்கு மருத்துவமனையில் இருந்து வெளியே சென்றவர் திரும்பி வரவில்லை. அவரது தந்தை ஓசூர் டவுன் போலீசில் கொடுத்த புகாரில், வேலுார் மாவட்டம், கருகம்பத்துார் புது தெருவை சேர்ந்த எலக்ட்ரீஷியன் சூர்யா, 25, மீது சந்தேகம் இருப்பதாக தெரிவித்துள்ளார். போலீசார் விசாரிக்கின்றனர்.தளி அடுத்த தேவகானப்பள்ளி அருகே ராமேன அக்ரஹாரத்தை சேர்ந்தவர் பாபு, 45. விவசாயி; கடந்த, 14 மாலை, 6:00 மணிக்கு வீட்டிலிருந்து வெளியே சென்றவர் திரும்பவில்லை. அவரது மனைவி உஷா, 35, புகார் படி, தளி போலீசார் பாபுவை தேடி வருகின்றனர்.
22-Dec-2024