உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / போதை பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு பேரணி

போதை பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு பேரணி

ஊத்தங்கரை: ஊத்தங்கரை ரவுண்டானாவில், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில், போதை பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது. ஊத்தங்கரை கிளை தலைவர் ஷப்பி தலைமை வகித்தார். கிருஷ்ணகிரி மாவட்ட தலைவர் முகமது அயாஸ், மாவட்ட செயலாளர் சித்திக் முன்னிலை வகித்தனர். மாநில செயலாளர் முஷ்ஸின் போதை பொருள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். அண்ணா நகரில் இருந்து ரவுண்டானா வரை, போதை பொருள் எதிர்ப்பு பதாகைகளை கையில் ஏந்தி, சிறுமிகள் உட்பட, 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஊத்தங்கரை துணைத்தலைவர் அப்பாஸ் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை