உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / ரூ.81.74 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவி வழங்கல்

ரூ.81.74 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவி வழங்கல்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி வட்டம் பெண்டர-ஹள்ளி கிராமத்தில், மக்கள் தொடர்பு திட்ட முகாம், மாவட்ட கலெக்டர் சரயு தலைமையில் நடந்தது. இதில், 154 பயனாளிகளுக்கு, 81.74 லட்சம் ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கி அவர் பேசினார். முன்னதாக, வேளாண் துறை, சமூக நலத்துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, தோட்டக்கலைத்துறை, ஒருங்கிணைந்த குழந்-தைகள் வளர்ச்சி திட்டம், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு ஆகிய துறைகள் மூலம் அமைக்கப்பட்டிருந்த கண்காட்-சியை பார்வையிட்டார்.கிருஷ்ணகிரி ஆர்.டி.ஓ., பாபு, தனித்துணை ஆட்சியர் (சமூக பாது-காப்பு திட்டம்) பன்னீர்செல்வம், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் பத்மலதா, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ