மேலும் செய்திகள்
கார் கண்ணாடியை உடைத்து ரூ.2 லட்சம் திருட்டு
16-Nov-2024
போலி டாக்டர் கைதுகிருஷ்ணகிரி, நவ. 20-கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி, கொங்கனப்பள்ளி சாலையில், 'ஆஷிகா கிளினிக்' என்ற பெயரில் மருத்துவமனை இயங்கி வருகிறது. இங்கு, போலி டாக்டர் சிகிச்சையளிப்பதாக புகார் சென்றது. நேற்று முன்தினம் இரவு அங்கு தேசிய ஊரக சுகாதார திட்டத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மருத்துவர் சண்முகவேல், மருந்துகள் கட்டுப்பாட்டு அலுவலர் விஜயலட்சுமி தலைமையிலான அதிகாரிகள் மற்றும் போலீசார், வருவாய் துறையினர் அடங்கிய குழுவினர் சோதனை மேற்கொண்டனர்.அப்போது, அங்கிருந்த வேப்பனஹள்ளியை சேர்ந்த சவுதா, 40, மருத்துவம் பயிலாமல் நோயாளிகளுக்கு ஆங்கில முறை சிகிச்சை அளித்து வந்தது தெரியவந்தது. மேலும் இருவர், இங்கு டாக்டர் என்ற பெயரில், பணிபுரிந்து வருவதாகவும் புகார் எழுந்த நிலையில், அவர்கள் அங்கு இல்லை. அதிகாரிகள் குழு புகார் படி, வேப்பனஹள்ளி போலீசார் சவுதாவை கைது செய்தனர்.
16-Nov-2024