உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வுகிருஷ்ணகிரி, : கிருஷ்ணகிரி புதிய பஸ் ஸ்டாண்டில் வட்டார போக்குவரத்து துறை சார்பில் சாலை பாதுகாப்பு மாத விழா விழிப்புணர்வு பேரணி நடந்தது.மாவட்ட கலெக்டர் சரயு கொடியசைத்து பேரணியை துவக்கி வைத்தார். கிருஷ்ணகிரி புதிய பஸ் ஸ்டாண்டில் துவங்கிய டூவீலர் பேரணி, பழைய பேட்டை காந்தி சிலை, புதுப்பேட்டை, ரவுண்டானா, பெங்களூரு சாலை வழியாக ராயக்கோட்டை மேம்பாலத்தில் நிறைவடைந்தது.இதில், 300-க்கும் மேற்பட்ட போலீசார், ஓட்டுனர் பயிற்சி பள்ளி நிர்வாகிகள், வாகன விற்பனை முகவர்கள் ஹெல்மெட் அணிந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். கிருஷ்ணகிரி டி.எஸ்.பி., முரளி, வட்டாரபோக்குவரத்து அலுவலர்கள் காளியப்பன், பிரபாகர், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ