உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / சைக்கிளில் மஞ்சப்பையுடன் விழிப்புணர்வு

சைக்கிளில் மஞ்சப்பையுடன் விழிப்புணர்வு

சைக்கிளில் மஞ்சப்பையுடன் விழிப்புணர்வுகிருஷ்ணகிரி,:காவேரிப்பட்டணம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், போதை ஒழிப்பு மன்றம் மற்றும் பசுமை பாதுகாப்பு அமைப்பு சார்பில், புவியின் சுற்றுச்சூழலை காக்கவும், பிளாஸ்டிக்கை ஒழிக்கவும், விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், 'மீண்டும் மஞ்சப்பை' சைக்கிள் விழிப்புணர்வு பேரணி நடந்தது. தலைமையாசிரியை வளர்மதி தலைமை வகித்து பேரணியை துவக்கி வைத்தார்.இதில், மாணவியர் தங்கள் சைக்கிள் முன் மஞ்சப்பையை கட்டியும், விழிப்புணர்வு பேனர்களை ஏந்தியும் பேரணியாக சென்றனர். பள்ளி வளாகத்தில் துவங்கிய பேரணி, காவேரிப்பட்டணம் நகர், பாலக்கோடு சாலை வழியாக மீண்டும் பள்ளியிலேயே நிறைவடைந்தது. தொடர்ந்து மாணவியர் மஞ்சப்பைகளை ஏந்தி, மனிதசங்கிலியாக நின்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். காவேரிப்பட்டணம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் சுற்றுச்சூழலை மேம்படுத்த பள்ளியில் நர்சரி வளர்ப்பு, மாடித்தோட்டம், காலநிலை மாற்ற கண்காட்சி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை