திம்மராய சுவாமிகோவில் தேரோட்டம்
திம்மராய சுவாமிகோவில் தேரோட்டம்ஓசூர் : கிருஷ்ணகிரி மாவட்டம், பாகலுார் அருகே பேரிகை சாலையிலுள்ள குடிசெட்லு கிராமத்தில், ஸ்ரீதேவி, பூதேவி சமேத பிரசன்ன திம்மராய சுவாமி கோவில் உள்ளது. இக்கோவில் தேர்த்திருவிழா கடந்த, 8ல் துவங்கியது. நேற்று மதியம், 12:40 மணிக்கு தேரோட்டம் துவங்கியது. ஓசூர், தி.மு.க., - எம்.எல்.ஏ., பிரகாஷ் மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். உற்சவ மூர்த்திகளுடன் முக்கிய வீதிகளில் சென்ற தேர், மீண்டும் நிலையை அடைந்தது. தமிழக எல்லை கிராம மக்கள் மட்டுமின்றி, ஆந்திரா, கர்நாடகா மாநில பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. வரும், 16ல், எருது விடும் விழாவுடன், விழா நிறைவு பெறுகிறது.