உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / தேனீக்கள் கொட்டி முதியவர் பலி

தேனீக்கள் கொட்டி முதியவர் பலி

தேனீக்கள் கொட்டி முதியவர் பலிஓசூர்:ஓசூர், மரகதாம்பிகை உடனுறை சந்திரசூடேஸ்வரர் கோவில் தேர்த்திருவிழாவையொட்டி, தேர்ப்பேட்டையிலுள்ள மலை அடிவாரத்தில், தர்மபுரி மாவட்டம், அரூர் அருகே தாசரஹள்ளியை சேர்ந்த வெங்கடேஷ், 75, என்பவர் கடை போட்டு, உப்பு, மிளகு, தேங்காய் போன்றவற்றை விற்றார். கடந்த, 13 மாலை, 5:00 மணிக்கு, சாலையோர மரத்திலிருந்த தேன்கூடு கலைந்து தேனீக்கள், வெங்கடேசன் உட்பட மொத்தம், 22 பேரை கொட்டின. இதில் படுகாயமடைந்த அவரை, கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்த நிலையில் கடந்த, 15ல் இரவு உயிரிழந்தார். ஓசூர் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை