மேலும் செய்திகள்
குடியிருப்புகளில் உலா வரும் காட்டு மாடுகள்
16-Feb-2025
கிராமங்களில் சுற்றித்திரியும்ஒற்றை யானைகளால் அச்சம்தேன்கனிக்கோட்டை:கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வனச்சரகத்தில், 10க்கும் மேற்பட்ட யானைகள் முகாமிட்டுள்ளன. இதில் பெரும்பாலான யானைகள் தனியாக உள்ளன. தேன்கனிக்கோட்டை அருகே ஏணிமுச்சந்திரம் முனீஸ்வரன் கோவில் அருகே, நேற்று காலை சாலையில் ஒற்றை யானை சுற்றித்திரிந்தது. இதனால், அப்பகுதி மக்கள் அச்சமடைந்து வீடுகளில் தஞ்சமடைந்தனர். அதேபோல், தேன்கனிக்கோட்டை அருகே ஜார்க்கலட்டி மற்றும் கம்மந்துார் ஆகிய கிராமங்களிலும் ஒற்றை யானை சுற்றித்திரிந்தது.அத்திக்கோட்டை கிராமத்தில், நேற்று காலை தனித்தனியாக இரு ஒற்றை யானைகள் நீண்ட நேரமாக முகாமிட்டிருந்தன. கிராம பகுதிகளை நோக்கி ஒற்றை யானைகள் படையெடுத்து வருவதால், பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். மக்கள் பாதுகாப்பாக இருக்க, வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும், வாகன ஓட்டிகள் சாலையில் பத்திரமாக செல்லுமாறு அறிவுறுத்தி உள்ளனர்.
16-Feb-2025